எந்த முறையில் தேர்தல் நடத்தினாலும் நாமே வெறியீட்டுவோம்! மஹிந்த சூளுரை

301

பழைய முறையிலோ அல்லது புதிய முறையிலோ தேர்தல் நடத்தப்பட்டாலும் நாமே வெற்றியீட்டுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

ரத்துபஸ்வல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

இன்று விவசாயிகளின் நெல்லுக்கு விலை நிர்ணயிக்கப்படவில்லை. 15, 16 மற்றும் 18 ரூபாவிற்கு விற்பனை செய்ய நேரிட்டுள்ளது.

எமது ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டில் அரிசி இறக்குமதி செய்யப்பட அனுமதியளிக்கப்பட்ட போதிலும், இறுதியில் விளைச்சல் காரணமாக அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை.

நெல்லின் விலை குறையும் போது அரிசியின் விலை எவ்வாறு உயர்த்தப்படுகின்றது? இதுதான் நல்லாட்சி அரசாங்கத்தின் கணக்கு விபரம்.

அரசாங்கம் சொல்லும் அனைத்தையும் அனுமதிக்காது மக்கள் விரோதமான திட்டங்களை எதிர்க்கவும் விமர்சனம் செய்யயும் நாடாளுமன்றில் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

SHARE