கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் கைது

278

பொரல்லை சிறைச்சாலைக்கு அருகில் கடந்த 5ஆம் திகதி மூன்று மாத கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம-மிதிகம பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரை கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகவும்,கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபரிடமிருந்து கைக்குண்டுகள் மற்றும் கைத்தொலைபேசிகள் ஐந்தும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தற்போது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் குறித்த கர்ப்பிணிப் பெண் சத்திர சிகிச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும்,குறித்த பெண்ணின் வயிற்றில் உள்ள சிசு பாதுகாப்பாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE