வவுனியா தம்பா ஹோட்டலில் 09.03.2016 அதாவது புதன் கிழமை காலை 09.00-1200 மணிவரை வட மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுடனான தேர்தல் அறிக்கையிடல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடலில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தேர்தல் மற்றும் தேர்தல் நேரங்களிலான ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடியதுடன், வடமாகாணத்தின் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி தொடர்பான தேவைகளும் கேட்டறியப்பட்டது. இக்கலந்துரையாடலில் வடமாகாணத்தைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.