தனுஷ் நடிப்பில் கடைசியாக வந்த தங்கமகன் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால், தன் அடுத்த படமான கொடி அதிரடிப்படமாக இருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.
அதே நேரத்தில் பறந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகள் இருக்க கூடாது என கூறிவிட்டாராம்.
ஏனெனில் தற்போதுள்ள ரசிகர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள், அவர்களை ஏமாற்ற முடியாது, அதனால், இனி ரோப் கட்டி பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகள் வேண்டாம் என கூறியுள்ளார்.