யாழ்ப்பாணம் செல்கின்றார் சாகல ரட்னாயக்க

245

நாளை யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலைவரம் குறித்து நேரில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்னாயக்க, பொலிஸ்மா அதிபருடன் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வருகின்றார்.

யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் கலாசார சீர்கேடுகள் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட எம்.பியான டக்ளஸ் தேவானந்தா, 23/2ஆம் இலக்க நிலையியற் கட்டளையின்கீழ் எழுப்பியிருந்த கேள்விக்கு நேற்று சபையில் பதிலளித்தபோதே யாழ். விஜயம் குறித்து குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த விடயம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் வெள்ளிக்கிழமை பொலிஸ்மா அதிபருடன் யாழ்ப்பாணம் செல்லவுள்ளேன்” என்றார்.

SHARE