களியாட்ட விடுதி கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

259

களியாட்ட விடுதியில் இரண்டு தரப்பினருக்கு இடையில் நடந்த மோதலில் இளைஞரொருவர் பலியான சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் ஜெயந்திபுரம் 22ஆம் சந்தி பிரதேசத்தை சேர்ந்த 26 வயது மதிக்கதக்கவர் எனவும் குறித்த களியாட்ட விடுதியில் காவலாளியாக கடமையாற்றியவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil-Daily-News-Paper_49123346806

மேலும், சீதுவ, லியனகேமுல்லை பிரதேசத்தில் உள்ள களியாட்ட விடுதியில் தடியால் தாக்கப்பட்ட நிலையில் 22 வயதுடைய குறித்த நபர் நேற்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE