மவுசாகலை நீர்த்தேக்கத்தில் மூழ்கிய ஆலயம், வெளியே தெரிகிறது

262

மலையகமெங்கும் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் தேக்கங்களில் போதியளவு நீரின்றி எங்கும் காணப்படுகின்றது. மஸ்கெலியா மவுசாக்கலை, நோட்டன், சுரேந்திரா, டிக்கோயா காசல்ரீ, கென்னியோன் ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் நாளுக்கு நாள் நீர் வற்றி வருவதால், மின்சார தட்டுப்பாடு ஏற்படலாமென பலரும் அஞ்சுகின்றனர்.

மலையகத்தில் நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக மவுசாகலை நீர்த்தேக்கத் தின்  நீர்மட்டம் 20 அடி வரை குறைவடைந்துள்ளது.

இது இவ்வாறிருக்க மஸ்கெலியா மவுசாகலை நீர்த்தேக்கத்தில் நீரில் அமிழ்ந்துள்ள (பழைய நகரில்) ஸ்ரீ சண்முகநாதர் ஆலயம் தற்போது மீண்டும் வெளித் தெரிகிறது. நீர் நிறைகின்ற காலத்தில் ஆலயம் முற்றாக நீரில் மூழ்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

(க.கிஷாந்தன்)

741eb99d-49e2-4c77-9cc4-0ef3106a999f abb365a5-41fd-49ed-b676-8c78f63081f1 ae4f4b5d-2f4e-4081-8b46-55ca1ed5f8b5 aedcb385-34f2-4099-851a-941d467b7ac6 e1307cad-3733-4fff-992f-433bce672350

 

SHARE