வவுனியா நகரசபைக்கு முன்னால் காணாமல் போன மற்றும் சிறையிலிருக்கும் அரசியல் கைதிகளின் உறவுகள் கடந்த 14 நாட்களாக கொழும்பு மகசின் சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வரும் தங்கள் பிள்ளைகளை விடுதலை செய்யகோரி அடையாள உண்ணாவிரதமொன்றை மேற்கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சிறைக்கைதிகளின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில்
நல்லாட்சியை கொண்டுவந்த தமிழ் மக்கள் உண்ணா நோன்பிருந்து எமது பிள்ளைகளின் விடுதலையை வலியுறுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உளரீதியாக கடுமையான மனக்கஸ்ரங்களை அனுபவிக்கிறோம். இந்த நல்லாட்சி அரசு உடனடியாக 200 உட்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்து தமிழ் மக்களுக்கு ஏனைய சமூகத்துடன் ஒற்றுமையாக வழ்வதற்கான சூழலை ஏற்படுத்தவேண்டும். தவறு செய்யாதவர்கள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் என்ற காரணத்தினால் நல்லாட்சி அரசு மௌனம் சாதிப்பதாக குற்றஞ்சாட்டினார். எங்கள் பிள்ளைகளை விடுதலை செய்யாவிடினும் பரவாயில்லை சிறைச்சாலையில் சென்று பார்க்க அனுமதியுங்கள் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.