பல்கலைக்கழக ஊழியர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னிலையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள சுமார் 1000ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதிய வயதெல்லையை 60ஆக உயர்த்துமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளதுடன், ஊழியர் நம்பிக்கை நிதியத்தை பெற்றுத்தருமாறும் தெரிவித்துள்ளனர்.
இடைநிறுத்தப்பட்ட மாதாந்த இழப்பீட்டு படி, கொடுப்பனவுகளையும் மீண்டும் வழங்குமாறும் கூறியுள்ளனர்.
இதேவேளை, பல்கலைக்கழகத்தில் இருக்கும் சகல பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்யுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பணியில் தற்காலிக ஊழியர்களாக கடமைப்புரிபவர்களை, நிரந்தர ஊழியர்களாக நியமிக்குமாறும் இதன்போது, கேட்டுள்ளனர்.
இதேவேளை, சொத்துக்கடன் தொகையை அதிகரிக்குமாறும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மொழிக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை மீளவும் வழங்குமாறும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், பல்கலைக்கழக ஊழியர்களுக்கு பொதுவான காப்புறுதி திட்டம் வேண்டுமெனவும் இதன்போது குறித்த ஆர்ப்பாட்டக்கார்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு முன்பும் பல தடவைகள் இவர்களால் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தப்பட்டபோதும், அதற்கு சரியான தீர்வு கிடைக்காத நிலையில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமாக இது முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.