பசில் ராஜபக்சவுக்குப் பிணை – யோசிதவின் விளக்கமறியல் நீடிப்பு

251

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.கே.கே.ஏ.ரணவக ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இவர்களுக்கு பிணை வழங்கி இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யோசிதவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ச உள்ளிட்ட ஐவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, இவர்களை தொடர்ந்தும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Basil-Rajapaksha_yositha

SHARE