ஊழல் தொடர்பான கைது சிலரை இலக்கு வைத்தா? விசாரணை என்கிறார் மஹிந்த

242
ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறிப்பிட்ட சிலரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுசெயலாளராக பதவி ஏற்றதன் பின்னர், ஊடகவியலாளர்களை சந்திக்கும் வகையில், கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு எதிர்வரும் காலங்களில் தேவையா என்பது குறித்து சிந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் இடை நிறுத்தப்பட்டுள்ள சகல அபிவிருத்தி பணிகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதோடு, எதிர்வரும் ஆண்டில் புதிய திட்டங்களும் முன்வைக்கப்பட இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நாட்டில் ஆட்சியில் இருக்கும் இந்த தேசிய அரசாங்கம் இதேபோல் தொடர்ந்தும் இயங்குமெனவும் குறிப்பிட்டார்.

இந்த தேசிய அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமும் இல்லை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசாங்கமும் இல்லை. பொது மக்களுக்கு சேவை வழங்க உருவாக்கப்பட்ட அரசாங்கம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

786275fe186721de537b580245bb5fef_XL

SHARE