செவனகல, அம்பிலிப்பிட்டிய பகுதியில் அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பெண்ணின் கணவர் கடும் காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.