ஒலுமடு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் முதல்வர்.கு.விமலேந்திரன் தலைமையில் ஆண்டு 1-5 ஆண்டு வரையுள்ள மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியினை வவுனியா வடக்கு ஆரம்பக்கல்வி ஆலோசகர் த.சுந்தரலிங்கம், நெடுங்கேணி கோட்டக்கல்வி அதிகாரி வேலு கிருபானந்தம் ஆகியோரும் கலந்துகொண்டு காட்சிக்கூடங்களைத் திறந்துவைத்து பார்வையிட்டுள்ளனர்.
இதில் ஆரம்பப்பள்ளி மாணவர்களினால் பல காட்சிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு அதற்கான விளக்கங்களையும் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினர். மாணவர்களினால் மாதிரிச்சந்தையும் அமைக்கப்பட்டு சந்தை நடைமுறையில் விற்பனையும் இடம்பெற்றுள்ளது .
இதற்கு அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
படங்களும் தகவலும்:- கோபிகா (புளியங்குளம்)
முல்லைத்தீவு உடையார்கட்டு ஆரம்ப வித்தியாலயம் வைபவ ரீதீயாகத் திறப்பு
உடையார்கட்டு ஆரம்ப வித்தியாலய முதல்வரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர், வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டு இக் கட்டடத்தினை திறந்து வைத்துள்ளனர்.
மேலும் நிகழ்வில் வடமாகாண சபையின் பிரதித் தவிசாளர் அன்ரனி ஜெகநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நீர்மலநாதன், வடமாகாண சபையின் உறுப்பினர் சிவநேசன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:- கோபிகா (புளியங்குளம்)