
சிம்பு படம் எப்போது வரும் என அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இவரின் அடுத்த படமான இது நம்ம ஆளு மார்ச் 25ம் தேதி வருவதாக இருந்தது.
ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது. மேலும், இதில் ஒரு பாடலுக்கு அடா ஷர்மாவை நடனமாட சிம்பு அழைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வந்த தகவலின்படி இது நம்ம ஆளு, தெறி படம் வரும் அதே தேதியில் தான் வரவிருக்கின்றதாம். ஏற்கனவே துப்பாக்கியுடன் போடா போடி வந்தது குறிப்பிடத்தக்கது.