ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருடன் ஒத்துழைப்புக்களை அதிகரிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையிடம் கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான ஐரோப்பிய ஒன்றியக்குழு இந்த கோரிக்கையை மனித உரிமைகள் பேரவையில் வைத்து விடுத்துள்ளது. ஏற்கனவே இலங்கை தமது நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருடன் மேலும் ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது.