கொட்டகலையில் வாகன விபத்து

257

கொழும்பிலிருந்து நுவரெலியா பகுதிக்கு 11.03.2016 அன்று காலை மாணவர்களை ஏற்றி சுற்றுலா பிரயாணம் மேற்கொண்ட பஸ் ஒன்று மீண்டும் 11.03.2016 அன்று மாலை கொழும்புக்கு திரும்புகையில் குறித்த இடத்தில் பின்னோக்கி வந்த மோட்டர் சைக்கிளில் பயணித்த நபர் மேற்படி பஸ்ஸை முந்தி செல்ல முற்பட்ட போது இந்த விபத்து சம்பவித்துள்ளது.

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை புதிய சுரங்கப்பாதைக்கும் கொட்டகலை பால் சேகரிப்பு நிலையத்திற்கும் இடையில் பிரதான வீதியில் 11.03.2016 அன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுங்காயம்பட்டு கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

பஸ்ஸிற்கு அடி புறத்தில் மோட்டர் சைக்கில் சாரதியுடன் வலிக்கி சென்றதன் காரணமாக சாரதி படுங்காயங்கள் அடைந்துள்ளார். இந்த நிலையில் இவரை அருகில் உள்ள கொட்டகலை வைத்தியசாலையில் உடனடியாக சேர்கப்பட்டட அதேவேளை ஸ்தலத்திற்கு விரைந்த திம்புள்ள – பத்தனை பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

6c68a047-ff3b-447e-92b6-06bb5d9736c2 8bfdef64-0ae6-4315-abdc-a755042395a1 45440c3f-bc88-4053-845c-45edf7ead1b9 c925b266-712d-468f-8bc0-ae7fc8e78c7a ead1b9c3-05df-4006-b2f5-3bf71c137bd4 fd7e3952-776c-4198-88b6-17ce50f5ade9

SHARE