தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது

236

தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23ம் மற்றும் 24ம் திகதிகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

வட மாகாணசபையின் அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் கடந்த 8ம் திகதி நாடாளுமன்றில் தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை.

எனினும், கடந்த 10ம் திகதி வட மாகாணசபையில் சில திருத்தங்களுடன் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

download

இதனைத் தொடர்ந்து அனைத்து மாகாணசபைகளினதும் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் எதிர்வரும் 23ம், 24ம் திகதிகளில் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளது.

SHARE