
இந்திய சினிமாவின் நம்பர் 1 நாயகன் என ஒரு விதத்தில் அமீர் கானைகூறலாம். அது எப்படி அமிதாம் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி இருக்கும் போது அவர்களுக்கு பின் வந்தவரை நீங்கள் எப்படி நம்பர் 1 என்று கூறலாம் என நீங்கள் கேட்பது புரிகின்றது.
ஆனால், பாக்ஸ் ஆபிஸில் எவரும் எட்ட முடியாத உயரத்தில் இருப்பது அமீர் கான் தான். படத்திற்கு படம் கிளாஸ், மாஸ் என இந்திய ரசிகர்களின் பல்ஸை தன் விரலில் அழுத்தி பார்க்கிறார்.
கஜினியில் முதல் 100 கோடி ரூபாய், 3 இடியட்ஸில் முதல் ரூ 300 கோடி, தூம்-3யில் முதல் ரூ 500 கோடி இவை அனைத்தையும் விடபிகே படத்தின் மூலம் ரூ 700 கோடி வசூல் செய்து இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வலம் வரும் இவருக்கு இன்று பிறந்தநாள். இது மட்டுமின்றி ரங்தே பசந்தி, தாரே ஜமீன் பர், மங்கள் பாண்டே, லகான், தலாஷ் ஆகிய படங்களின் மூலம் நடிப்பில் உச்சத்தை தொட்டவர். பார்ட்டி, காதல் என இருந்த பாலிவுட் டூட்டையே மாற்றியவர் என கூறலாம்.
அமீர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த மனிதாபிமானமும் கொண்டவர். சமூகத்திற்கு தேவையான பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தி வருகிறார். இது மட்டுமின்றி தன்னுடைய ரசிகன் ஒரு ரிக்ஷாகாரர் என்று தெரிந்தும் அவர் அழைத்ததற்காக அவருடைய திருமணத்திற்கே சென்று வந்தவர்.
சமீபத்தில் இவரை சுற்றி பல சர்ச்சைகள் சுற்றினாலும், நான் இந்தியன் எதற்காகவும் இங்கிருந்து வெளியேற மாட்டேன் என கூறினார். இவர் இன்று போல் என்றும் நல்ல மனிதராகவும், பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகவும் வலம் வர சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.