மலையகத்தில் வரட்சி – பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரும் சிரமம்

254

கடந்த 3 மாதகாலமாக பெருந்தோட்ட பகுதியில் கடுமையான சுட்டெரிக்கும் வெயிலான காலநிலை நிலவி வருவதோடு காலை வேளையில் கடும் பணி பொழிவும் ஏற்பட்ட வண்ணமே உள்ளன.

மலையகத்தில் கடும் வரட்சியால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடுமையான பணி காரணமாக அதிகமான தேயிலை செடிகள் கருகி காணப்படுவதோடு தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சலும் குறைவடைந்துள்ளது. இதனால் தோட்ட நிர்வாகத்தால் தொழிலாளர்களுக்கு அதிகமான வேலை நாட்களை வழங்க முடியாத சூழ்நிலைக்கு தோட்ட நிர்வாகங்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மாத்திரமே தொழில் வழங்கப்படுவதால் பொருளாதார ரீதியில் தனது குடும்ப சுமையுடன் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு முகங்கொடுக்கின்றனர்.

ஒரு நாள் சம்பளத்திற்காக தோட்ட தொழிலாளர்களை 18 கிலோ கொழுந்தினை பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுக்கின்றது. தற்போது தேயிலை செடிகளில் கொழுந்தின் விளைச்சல் குறைந்தே காணப்படுவதால் நிர்வாகங்கள் கேட்கும் 18 கிலோ கொழுந்தினை பறிக்க முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் உள்வாங்கியுள்ளனர்.

கூட்டு ஒப்பந்தம் முடிந்து ஒரு வருடம் காலவதியாகிய போதிலும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அசமந்த போக்கினை கடைப்பிடிப்பதாக தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆயிரம் ரூபாய் பெற்று தருவதாக தொழிலாளர்கள் மத்தியில் உறுதி மொழி வழங்கிய போதிலும் இக்கட்சி எவ்வித பேச்சுவார்த்தையும் சரியான முறையில் முன்னெடுக்கவில்லை என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தேர்தல் காலத்தில் தற்போது அமைச்சராக இருக்கின்ற பழனி திகாம்பரம் அவர்கள் தேர்தலின் காலத்தில் மக்கள் மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆயிரம் ரூபா பெற்று தருவதாக கூறியதாகவும், ஒரு நாளுக்கு நூறு ரூபாய் அடிப்படையில் மாதாந்தம் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் வழங்கவதாகவும் இப்பணம் தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை என தொழிலாளர்கள் மன வேதனையுடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

அத்தோடு கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மலையக மக்களுடைய வயிற்றில் அடித்த ஒரு விடய ம் என தோட்ட தொழிலாளர்கள் தெரிவிப்பதோடு தற்போது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இதேவேளையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு தொழிலாளர்கள் மற்றுமொரு வேதனையை தோற்றுவித்துள்ளது.

இம்மாதம் தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட சம்பளத்தின் தொகை 3000 ரூபாய்க்கு கீழ்ப்ட்ட தொகையாக பெறப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதனால் தனது குடும்ப தேவைகளை செய்து கொள்ள முடியாத பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் கடுமையான வெயில் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு காணப்படும் இதேவேளை அதிகமான பகுதியில் காடுகளை எரித்ததால் அங்கிருந்த நீர் ஊற்றுகள் வற்றிப்போயுள்ளது.

இதன் காரணமாக மக்கள் குடிநீரை பிரச்சினையையும் எதிர்நோக்கி வருகின்றனர். குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் நீர் வசதியில்லாமல் பாதிடும்க்கப்படுவதோடு விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்தோடு அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாமல் பல்வேறு இடர்களை சந்திக்க வேண்டியதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது தோட்டபகுதியில் வேலைவாய்ப்பு குறைவடைந்துள்ளதால் குடும்ப வருமானத்தினை ஏற்படுத்திக் கொள்வதற்காக வெளிமாவட்டங்களுக்கு மலையக இளைஞர்கள் படையெடுக்கின்றனர். அது மட்டுமில்லாமல் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் உட்பட மலையக அரசியல்வாதிகள் நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென மலையக தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(க.கிஷாந்தன்)

2e763c89-128f-40e1-bb78-069e97b6070f 9bc99b74-7135-4e67-9a18-0dc4e00de973 71ee0c34-f456-4fd2-9e30-1f5714d404cb 948c11e1-e618-4be4-a036-29be5e1b63e8 886318b0-0587-462e-acff-3be130003879

SHARE