அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் பேரணி

270

பல்கலைக்கழகத்திற்குள் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நாளை நடாத்தவுள்ளனர்.

ertyuiojhgfddvbnmiuyhgfcrf4-600x338

பல்கலைக்கழகத்தினுள் காணப்படும் பல குறைப்பாடுகள் இதுவரை நிவர்த்தி செய்யப்படாமை,கல்வி தனியார் மயப்படுத்தல் மற்றும் பல்கலைக்கழக்திற்குள் பணம் வசூலித்தலை தடுத்தல் போன்ற பிரச்சினைகளை மையப்படுத்தி இந்தப் பேரணி நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் இதுவரை தீர்வினை பெற்றுக் கொடுக்காததாலேயே அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்று திரட்டி இந்த பேரணியை ஏற்பாடு செய்திருப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

SHARE