வவுனியாவில் விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டி தீயில் எரிந்து நாசம்

915

வவனியா இறம்பைக்குளம் பகுதியில் இன்று மதியம் விபத்தில் சிக்கிய முச்சக்கரவண்டியொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

இறம்பைக்குளம் பகுதியில் பிரதான வீதியில் பயணித்த இம் முச்சக்கரவண்டி பிறிதொரு வீதியில் திருப்ப முற்பட்டவேளையிலேயே விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துள்ளது.

எனினும் இம் முச்சக்கரவண்டியின் சாரதிக்கோ வீதியில் பயணித்தவர்களுக்கோ தீக்காயங்கள் எற்பாடபோதிலும் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

படங்களும் தகவலும் :- காந்தன்

f11b63c5-11d3-4d75-b116-4afd167ca1e4

SHARE