தோட்டதொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கக்கோரி 13.03.2016 அன்று இரத்தினபுரி நகரில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.
மக்கள் விடுதலை முன்னனியின் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மலையக நகரங்களில் மேற்படி கையெழுத்து வேட்டை நடைபெற்ற நிலையில் நிகழ்வில் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் இராமசந்திரன்