சேட்டை காதலன் கார்த்தி- தோழா ஸ்பெஷல்

444

சேட்டை காதலன் கார்த்தி- தோழா ஸ்பெஷல் - Cineulagam

கார்த்தி-நாகர்ஜுனா நடிப்பில் தோழா திரைப்படம் மார்ச் 25ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வந்து அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதில் நாகர்ஜுனா நடிப்பை பற்றி பேசினாலும், பலரை கவர்ந்தது கார்த்தி-தமன்னாவின் குறும்பு சேட்டைகள் தான். ஏற்கனவே பையாவில் பொறுப்பான பையன், சிறுத்தையில் சேட்டை காதலன் என கலக்கியவர் கார்த்தி.

இந்த படத்தில் நாகர்ஜுனாவிற்கு பொறுப்பான நண்பன்,தமன்னாவிடம் சேட்டை காதலன் கலக்கியுள்ளார் போல, இவை ட்ரைலர் பார்க்கும் போதே தெரிகின்றது.

தமன்னாவை அவர் ஒவ்வொரு இடத்திலும் கலாய்க்கும் இடத்தில் செம்ம ஸ்கோர் செய்வார் போல, அதிலும் ட்ரைலர் முடியும் போது அவர் செய்யும் கலாட்டவிற்கு தமன்னா வெட்கப்பட்டு ஒதுங்குவது என நட்பை தாண்டி காதலர்களுக்கும் செம்ம டிரீட் காத்திருக்கின்றது.

SHARE