வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பாலக்காடு கிராம மக்களுடனான சந்திப்புகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் (15.03.2016) மேற்கொண்டார்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்து தற்போது படிப்படியாக மீளக்குடியமர்ந்த 46 குடும்பங்கள் தற்போது இங்கு வசித்து வருகின்றனர். குடியிருக்க உகந்த மனைகள் இன்றி குழந்தைகள், வயோதிபர்களுடன் வனப்பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் வாழ்வதாகவும், பலர் மின்சார இணைப்புகளை பெற வசதிகள் இன்றி இன்றும் மண்ணெண்ணை விளக்குகளை நம்பியே வாழ்வதாகவும் இப்பிரதேச மக்கள் விசணம் தெரிவித்தனர்.
அத்துடன் குடிநீர் வசதிகள் இன்மையால் கோடை காலங்களில் பெரும் சிரமங்களுக்கு உட்படுவதாகவும் தெரிவித்தனர். இதற்கான தீர்வுகளை தமக்கு விரைவாக பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர், குடிநீர் மற்றும் மின்சார வசதிகளை உடனடியாக தான் பெற்றுத்தருவதாகவும்,வீடமைப்பு நிர்மானங்கள் தொடர்பாக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்ட செயன்முறைகளுக்கு இப்பிரதேச மக்களையும் அரசாங்க அதிபரிடம் பிரேரிப்பதாவும் நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.