தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக்கூடிய சாத்தியம் கிடையாது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய அரசாங்கம் ஏற்கனவே மக்களுக்கு பல்வேறு வழிகளில் நிவாரணங்களை வழங்கியுள்ளது.
கொடுக்கக்கூடிய மிகவும் குறைந்த விலையில் பொருட்கள் வழங்கப்படுகின்றது. எல்லா நாட்களிலும் நிவாரணங்களை வழங்க முடியாது.
மக்களின் வருமானத்தை உயர்த்தி தற்காலத்தை விடவும் சிறந்த வாழ்க்கையை முன்னெடுக்கக்கூடிய வழியை அமைத்துக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.