பொதுமக்களின் அபிமானத்தையும் நல்லுறவையும் பெற்றுக்கொள்ளும் வகையில் தற்போதுள்ள பொலிஸ் சீருடையில் மாற்றமொன்றைக் கொண்டுவரவேண்டுமென சட்டம், ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்.
அமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நேற்று பொலிஸ் தலைமையகத்துக்கு விஜயம் செய்த அவர், தற்போதுள்ள பொலிஸ் சீருடையில் தான் அதிருப்தி கொண்டிருக்கவில்லை எனவும், நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறும் பொதுமக்களின் நன்மதிப்பையும் நல்லுறவையும் விருத்திசெய்யும் வகையிலும் அது மாற்றப்பட்டால் நல்லதென நினைப்பதாகவும் தெரிவித்தார்.
பொலிஸ் சீருடைகளில் மாற்றம் கொண்டுவருவதற்கான தனது ஆலோசனை பல்வேறு தரப்பிலும் தீர்க்கமாக ஆராயப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.