ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு கொழும்பில் ஆரம்பம்

267
ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு நிதியமைச்சர் ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு கொழும்பில் ஆரம்பம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் பெம்பெக் சுசன்டோனோ ஆகியோர் தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை சினமன் லேக்சைட் ஹோட்டலில் ஆரம்பமாகியுள்ளது..
ravi-karunanayake

இலங்கை அரசின் உதவியுடன் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் பெம்பென்க் சுசன்டோனோ ஆரம்ப உரையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளின் ஆலோசனையின் பேரில் 2010ம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி மாநாடானது ஆரம்பமாகியது. கடந்த மாநாடனது கொரியா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கிடையில் 2014ம் ஆண்டு நடைபெற்றது.

இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ள ஆசிய அபிவிருத்தி மாநாட்டில் ஆசிய நாடுகளின் கடன் வழங்கும் நிறுவனங்கள், உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் மற்றும் அரச நிறுவன பிரதானிகள் கலந்துகொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE