வெளிநாட்டு யுவதி ஒருவரின் பணப்பை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரேசா டிசாகே என்ற யுவதியே தனது பணப்பையினை பறிக் கொடுத்துள்ளார். செக் குடியரசைச் சேர்ந்த குறித்த யுவதி தனது கல்வி நடவடிக்கைக்காக இங்கு வந்து தங்கியிருப்பதாகவும்,நேற்றிரவு 8 மணியளவில் மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் 100ஆம் இலக்க பஸ் வண்டியில் பயணித்த வேளை
கொள்ளுபிட்டிக்கும், பம்பலப்பிட்டிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் வைத்து இவரது பணப்பை காணாமல் போயிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணப்பையில் குறித்த யுவதியின் வாகன சாரதி அனுமதிப்பத்திரமும் இருப்பதாக குறித்த யுவதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே காணாமல் போன பணப்பையை கண்டெடுப்பவர்கள் 0777999285 பிரபாத், 0785426095
தெரேசா என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.