கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தால் நடாத்தப்பட்டு வரும் முன்பள்ளி ஆசிரியைகளை மாகாண சபையுடன் இணைக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.
தங்களை வடமகாண சபையின் கீழ் கொண்டு வருவது கவலையளிப்பதாக குறித்த முன்பள்ளி ஆசிரியைகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், தமது எதிர்காலம் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஏற்கனவே தங்களுக்கு மாகாண சபையால் 4,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போது குறித்த தொகை பல மடங்கு அதிகமாகக் கிடைப்பதாகவும் குறித்த முன்பள்ளி ஆசிரியைகள் தெரிவித்துள்ளனர்.
மகாண சபையின் கீழ் சென்றால் இந்த வருமானத்தை தாங்கள் இழக்க நேரிடும் என்ற அச்சம் இவர்களிடம் காணப்படுவதையே இது காட்டுகிறது.
எனவே, குறித்த ஆசிரியைகளது வாழ்வாதாரத்தை அழித்துவிடாமல், அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் இந்த விடயத்தைக் கையாளுவதே நல்லதென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்துக்கது.