பொலிஸ் வீரர்கள் தினம் இன்று பம்பலப்பிட்டியில் அனுஸ்டிப்பு

238
152ம் பொலிஸ் வீரர்கள் தினமே இன்று அனுஸ்டிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் வீரர்கள் நினைத்தூபியின் எதிரில் இம்முறை நடைபெறவுள்ளது.

பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. பொலிஸ் நினைவுத் தூபிக்கு விசேட பொலிஸ் மரியாதை அணிவகுப்பொன்று நடத்தப்பட உள்ளது.

Hatton-Police-01 15mar24

அதன் பின்னர் மலர் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. உயிர் நீத்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நினைவு கூர்ந்து இந்த நிகழ்வு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் 3110 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையின் போது உயிர் நீத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

30 ஆண்டுகளாக நீடித்த போரின் போது 15 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 2594 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

SHARE