சிசிலியாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

279

லலித் கொத்தலாவலவின் மனைவியான சிசிலியா கொத்தலாவலவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் எதிர்வரும் 28ஆம் திகதி வரை சிசிலியாவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோல்டன் கீ நிறுவன வைப்பாளர்களின் சுமார் 5 பில்லியன் ரூபா நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் சிசிலியா கொத்தலாவ கடந்த மாதம் 4ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

லண்டனில் இருந்து நாடு திரும்பியபோதே அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE