வெளிநாட்டவர்கள் விரும்பும் தேனீரை அன்றும் இன்றும் வழங்குபவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்கள்: நிமல் சிறிபாலடி சில்வா பெருமிதம்

223

வெளிநாட்டவர்கள் விரும்பும் தேனீருக்காக தேயிலை தொழிலை மேற்கொண்டு இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு வித்திட்டவர்கள் தோட்ட தொழிலாளர்கள் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

காலம் காலமாக தோட்ட தொழிலை மேற்கொண்ட இவர்கள் ஆடை தொழிற்சாலை மற்றும் மத்தியக்கிழக்கு நாடுகளில் தொழில்களை செய்து தமது வியர்வையை சிந்தி, இந்த நாட்டின் அபிவிருத்திக்காக முதுகெழும்பாக செயல்பட்டு வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலவாக்கலையில் நேற்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக மகளிர் தினத்தை ஞாபகப்படுத்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுக்கும் இந்த மாபெரும் மகளிர் தின விழா, மறைந்த அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், எதிர்க்கட்சியில் அமராது தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி ஆளுங்கட்சியில் அங்கமாக விளங்கி சேவைகளை முன்னெடுத்து வருகின்றதென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது சாதாரண ஒரு அமைப்பு அல்ல. பல்வேறு வரலாற்றுகளை கொண்ட அமைப்பாகும். இதை யாரும் மறந்து விட கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பை யாரும் அழித்து விடவும் முடியாது. இந்த விடயத்தில் பெருந்தோட்ட அபிவிருத்தித்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க இருக்கின்றார். இவரை மலையக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளமை பெரும் வரப்பிரசாதம் என அமைச்சர் கூறியுள்ளார்.

இவரின் கூடாக வியர்வை சிந்தும் மலையக தொழிலாளர்களுடைய கோரிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் எடுத்துக்கூறி உரிமைகளை பெறும் வாய்ப்பு உள்ளதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரில் ஒருவரான நான் பெருமையடைகின்றேன் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

SHARE