கூட்டு எதிர்க்கட்சி ஐ.ம.சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளாது: உதய கம்மன்பில

230
கூட்டு எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளாது பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலம் கருத்து வெளியிடுகையில்,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டதன் காரணமாக மட்டும் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள முடியாது.

col_karuna20may

தேவை என்றால் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளுமாறு மஹிந்த அமரவீரவிற்கு அழைப்பு விடுக்கின்றோம்.

கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு கட்சிகளேனும் அவசியப்படுகின்றது.

எனினும் மஹிந்த அமரவீர பொதுச் செயலாளராக கடமையாற்றி வரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் அரைக்கால்வாசி பேர் கூட அங்கம் வகிக்கவில்லை.

ஹைட் மைதானக் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் மத்திய செயற்குழு நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி நீதிமன்றின் உதவியை நாடும்.ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள நாம் தயாரில்லை என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

SHARE