ஜனாதிபதி தலைமையில் சர்வதேச நீர் தினம்

264
இன்று சர்வதேச நீர் தினமாகும். 1992ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் செய்யப்பட்ட சிபாரிசையடுத்து மார்ச் 22ஆம் திகதியை உலக நீர் தினமாக ஐ.நா.பொதுச் சபை பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 18 வருடங்களாக இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
images10

நீரும் தொழில் வாய்ப்பும் என்பதே இம்முறை உலக நீர் தினத்தின் பிரதான தொனிப் பொருளாகும்.

உலக நீர்த் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், 1993ஆம் ஆண்டு முதல் உலக நீர்த் தினம் இலங்கையில் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், உலக நீர்த் தினத்தை முன்னிட்டு அருகி வரும் நீர் நிலைகளை பாதுகாக்கவும் அவை அசுத்தமாவதை தடுக்கவும் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் கூறுகின்றது.

SHARE