
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஜப்பானிய அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.
ஜப்பானில் நேற்று இடம்பெற்ற இலங்கையின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்ச டி சில்வா மற்றும் ஜப்பானிய பிரதி வெளியுறவு அமைச்சர் ஹிட்டோஸி கிக்காவடவை சந்தித்த போது இந்த கருத்து தெரிவி;க்கப்பட்டுள்ளது.
புதிய இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தாம் ஆவலாக இருப்பதாக ஜப்பானிய அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுடன் 2015ம் ஆண்டு இணங்கிக் கொண்ட முதலீட்டு உடன்படிக்கைக்கு அமைய இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜப்பானிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.