
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்யக்கூடிய கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகின்றது.
மார்ச் மாதம் 24ம் திகதி வரையில் பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முறைப்பாடுகள் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தால் இந்த கால அவகாசம் பூர்த்தியாவதற்கு முன்னதாக முறைப்பாட்டை செய்யுமாறு ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யு. குணதாச பொதுமக்களிடம் கோரியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.