அமெரிக்க நிறுவனத்தினால் நடத்தப்படும் நிகழ்வினை புறக்கணிக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்

269
அமெரிக்க நிறுவனமொன்றினால் நடத்தப்பட உள்ள நிகழ்வு ஒன்றை புறக்கணிக்கப் போவதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

உத்தேச புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் அமெரிக்காவின் யு.எஸ்.எயிட் நிறுவனத்தினால் கருத்தரங்கொன்று நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 29ம் திகதி பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு கூட்டு எதிர்க்கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்க நிறுவனங்கள் தலையீடு செய்யக் கூடாது என கூட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கருத்தரங்கில் பங்கேற்குமாறு அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யு.எஸ். எயிட் நிறுவனம் நாட்டின் உள்விவகாரங்களில் ஏற்கனவே தலையீடு செய்து சர்ச்சை ஏற்பட்டிருந்தது என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியினரோ அல்லது அமெரிக்கத் தூதரகமோ இந்த கருத்தரங்கில் பங்கேற்பதனை நிராகரித்தமை தொடர்பில் உத்தியோகபூர்வமாக கருத்து எதனையும் வெளியிடவில்லை.

SHARE