ஜேர்மன் நிபுணர்கள் ஆய்வறிக்கை இன்று பாராளுமன்றில் சமர்பிப்பு

254

மின் இணைப்பில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பில் ஜேர்மன் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வறிக்கை இன்று பாராளுமன்றில் மின்சக்தி மற்றும் எரிச்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவால் சமர்பிக்கப்படவுள்ளது.

இலங்கை வந்துள்ள ஜேர்மன் நிபுணர்கள் மின் இணைப்பு வெடிப்பு தொடர்பான ஆய்வுகளின் இறுதி அறிக்கையை நேற்று இலங்கை மின்சார சபை தலைவரிடம் கையளித்திருந்தனர்.

இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் இணைப்பில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த விஷேட நிபுணர்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE