தாஜூடின் கொலை விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு மாத கால அவகாசம் கோரப்பட்டுள்ளது

589
ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு மாத கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
waseem-thajudeen-640x400-720x480

விசாரணைகளை மேற்கொள்ள மேலும் இரண்டு மாத கால அவகாசத்தை வழங்குமாறு புலனாய்வுப் பிரிவினர் கோரியிருந்தனர்.

இந்தக் கோரிக்கைக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இன்று அனுமதியளித்துள்ளார்.

சம்பவம் குறித்த சீ.சீ.டி.வி காட்சிகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வேறு காட்சிகள் எதுவும் கிடைக்கவில்லை என சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

SHARE