கோத்தபாய, ஜகத் புஸ்பகுமார இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை!

259
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ஆகியோர் இன்று பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகவுள்ளனர்.

அழைப்பாணை பிறப்பிக்கப்பட்ட நபர்கள் என்ற அடிப்படையில் இன்று முன்னிலையாகவுள்ளனர்.

சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் இன்று ஆணைக்குழுவின் எதிரில் ஆஜராகவுள்ளார்.

இன்று காலை முதல் கட்ட விசாரணைகள் நடத்தப்பட உள்ளது.

இதேவேளை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இன்று மாலை ஆணைக்குழு எதிரில் சாட்சியமளிக்க உள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவிடம் சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE