புதிய பொலிஸ்மா அதிபரின் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் ஜனாதிபதியால் இவ்வாரத்தில் அரசமைப்பு சபைக்குப் பரிந்துரை செய்யப்படுமென அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்க, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவரின் பெயர்களுடன் மற்றுமொரு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் பெயரும் பரிந்துரை செய்யப்படவுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் அடுத்த மாதம் 12ஆம் திகதி தனது பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளதால் அவருடைய இடத்துக்குப் புதிய நியமனத்தை வழங்கவே இவர்கள் மூவரின் பெயர்களும் பரிந்துரைசெய்யப்படவுள்ளதாகத்தெரிவிக்கப்படுகின்றது.