அமைச்சர் ஹரீன் அமெரிக்காவின் மைக்ரோசொப்ட் மற்றும் ஒரேக்கிள் நிறுவனங்களுக்கு விஜயம்!

303
அமெரிக்காவுக்கான சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டுள்ள டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, மைக்ரோசொப்ட், ஒரேக்கிள் நிறுவனங்களுக்கு விஜயம் செய்துள்ளார்.

இலங்கையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அமைச்சர் ஹரின் அமெரிக்காவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அவர் தனது சுற்றுப் பயணத்தின் போது மைக்ரோசொப்ட் மற்றும் ஒரேக்கிள் போன்ற உலகப்புகழ் பெற்ற நிறுவனங்களுக்கும் விஜயம் செய்துள்ளதுடன், அவற்றின் மூலம் இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையை அபிவிருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அனுசரணையில் அமெரிக்காவின் ரெட்மண்ட் பிரதேசத்தில் இயங்கும் செயிண்ட் தோமஸ் பாடசாலையையும் அமைச்சர் ஹரின் பார்வையிட்டுள்ளார். குறித்த பாடசாலை முற்றுமுழுதாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் பாடங்களை இணையத்தளத்தின் ஊடாகவே கற்றுக் கொள்வதுடன், மாணவர்களின் செயற்பாடுகளின் போது இயந்திர மனிதர்களின் (ரோபோக்களின்) ஒத்தாசையும் பெற்றுக் கொள்ளப்படுவது குறித்தும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பார்வையிட்டுள்ளார்.

SHARE