ஜப்பானின் இரண்டு கடற்படை கப்பல்கள் இலங்கை வந்துள்ளன கொழும்பு துறைமுகத்தில் இந்த இரண்டு கப்பல்களும் நேற்று நங்கூரமிட்டன.
யுடாச்சி மற்றும் யுகாரி என்ற என்ற கப்பல்களே நல்லிணக்க விஜயத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் பயணித்தவர்களுக்கு இலங்கை கடற்படையினர் வரவேற்பை அளித்தனர்.
இதன்போது இலங்கையின் மேற்கு பிராந்திய கடற்படை தளபதிக்கும் கப்பலின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
இதேவேளை அமெரிக்காவின் கடற்படை கப்பல் ஒன்று நாளை கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது