அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் ஐந்து லட்சம் பெறுமதியான மோதிரம் தொலைந்து பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டி லுனுகம என்ற இடத்தில் நிகழ்வு ஒன்றில் அமைச்சர் நேற்று பங்கேற்றார். இதன்போது தமது மாணிக்ககல் பதித்த மோதிரத்தை காணவில்லை என்று அமைச்சர் கூறியதும் அந்த இடத்தில் பதற்றநிலை தோன்றியது.
இதனையடுத்து அனைத்து இடங்களிலும் தேடியபோதும் பின்னர் அமைச்சர் குறித்த நிகழ்வுக்கு வருவதற்கு முன்னர் உடுநுவர பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளரின் வீட்டின் கழிப்பறையில் இருந்து அது மீட்கப்பட்டது.
நிகழ்வுக்கு முன்னர் அமைச்சர் குறித்த கழிப்பறையை பயன்படுத்திய போதே மோதிரம் கீழே வீழ்ந்துள்ளதாக கருதப்படுகிறது.