பொன்சேகாவுக்கு யுத்தத்தை வெல்ல முடிந்ததா? -கோத்தபாய

235
தனது இராணுவத் தலைமையகத்தை பாதுகாக்க முடியாமல் போன இராணுவத்தளபதி பொன்சேகா நான்தான் யுத்ததை முடிவுக்குக் கொண்டு வந்தேன் என கூறுவதை என்னவென்று கூறுவது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
mahi-gota-sarath

இராணுவத் தலைமையகத்துக்குள் நுழைந்து இராணுவத் தளபதி மீது தாக்குதல் நடாத்தும் அளவுக்கு பலவீனமடைந்திருந்த பாதுகாப்பை சரி செய்ய முடியாமல் போன ஒருவர் தான் இந்த சரத் பொன்சேகா எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாரிய நிதி மோஷடி தொடர்பான விசாரணைப் பிரிவுக்கு முகம்கொடுத்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

யுத்தத்தைக் கொண்டு வருவதற்கு விமானப்படை, கடற்படை மற்றும் புலனாய்வுத் துறை போன்ற அமைப்புக்கள் பாரிய பங்களிப்பை வழங்கினர்.

இவற்றை மறந்து எப்படி ஒருவர் மாத்திரம் இதனைச் செய்தார் என்று கூறுவது.

2000 ஆயிரம் வாக்குகளைக் கூட பெற முடியாமல் போன ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியும், அமைச்சும் கிடைக்கப் பெற்றால், இவ்வாறு தான் தங்களுக்கு உதவியவர்களுக்கு விசுவாசத்துக்காக எதையும் கூறுவார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE