புதிய வாகனங்கள் பதிவு எண்ணிக்கையில் வீழ்ச்சி

239
இலங்கையில் அண்மை காலமாக புதிய வாகனப் பதிவு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் அதிகமாக காணப்பட்டுள்ளது.

எனினும் ,இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் 2837 வாகனங்களே பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும்,கடந்த வருடத்தில் இதன் எண்ணிக்கை 4138 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் புதிய வாகனங்களின் பதிவு மிகவும் மந்த கதியில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட புதிய வரவு செலவு திட்டத்திற்கு அமைய வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு ,தவணைக் கட்டண முறை அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் புதிய வாகனங்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வமின்றி இருப்பதாகவும்,இதன் காரணமாகவே குறித்த வாகனப் பதிவுகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BYD_Line-up_2015

 

SHARE