மின்சார துறையின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான யோசனை ஒன்றை துரிதமாக முன்வைக்குமாறு பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு (கோப் குழு) மின்சார சபை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய மின்சார நெருக்கடி சம்பந்தமாக விரிவாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நிலவும் நெருக்கடிக்கு துரித யோசனை உன்றை தயாரிக்குமாறு கோப் குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாக கோப் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.