இதனடிப்படையில் சில தேர்தல் தொகுதிகளில் கம் உதாவ நிகழ்ச்சித்திட்டம் மீண்டும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980 களில் ஆட்சியிலிருந்த அரசாங்கம் நாட்டின் நாலாபுறமும் வாழும் மக்களை ஒன்றிணைக்கும் பொருட்டு கம் உதாவ நிகழ்ச்சித் திட்டத்தினை ஆரம்பித்திருந்தது.
குறிப்பாக வறிய மற்றும் குறைந்த சிறப்புரிமைகளைக் கொண்டுள்ள மக்களை நெருங்கி அவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதார நிலைமைகளை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதேவேளை தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு கம் உதாவ கண்காட்சியும் நடத்தப்பட்டிருந்த நிலையில் 1990ஆம் தசாப்தத்தின் நடுப்பகுதியில் கம் உதாவ கண்காட்சி கைவிடப்பட்டது.
இந்த நிலையில் மனிதக் குடியிருப்பின் அபிவிருத்தியை மையமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட “கம் உதாவ” எனும் இணைந்த அபிவிருத்தி முயற்சி மற்றும் அதனுடன் இணைந்ததாக நடாத்தப்பட்ட கம் உதாவ கண்காட்சியை இந்த வருடத்தில் இருந்து சில தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கும் வகையில் மீண்டும் ஆரம்பிக்க வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.