ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதியமைச்சர் கருணாரத்தின பரணவித்தாரண, மற்றும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் இந்தக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.
இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து யாழ். தேவி புகையிரதம் மூலமாக இக்குழுவினர் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
வாருங்கள் ஒன்றாய் சுவாசிக்க எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் கடந்த கால போர்ச்சூழல் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கின் தமிழ் ஊடகவிலாளர்கள் தொடர்பில் தென்னிலங்கையின் நேசக்கரத்தை நீட்டுவதாகும்.
நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இருநாட்களும் யாழ்ப்பாணத்தில் இவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர்.
கடந்த காலங்களில் தாக்குதல்களுக்கு உள்ளான தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகநிறுவனங்களைப் பார்வையிடுவது, கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தல், ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து பாதுகாப்புத் தரப்பின் உயரதிகாரிகளுடன் உரையாடுதல்,
ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நடுதல், சலுகை விலையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்குதல் என்பன குறித்த நிகழ்ச்சித்திட்டங்களில் சிலவாகும்.