மின் தடைக்கு மின்சார சபையின் பொது முகாமையாளரே பொறுப்பு – அமைச்சரவை உப குழு

228
மின்மாற்றி வெடித்தன் காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சார விநியோக தடைக்கு இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறுப்புக் கூற வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கடமையை சரிவர செய்யாத காரணத்தினால், பொது முகாமையாளரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என இந்த விடயம் சம்பந்தமாக விசாரணை நடத்திய அமைச்சரவை உப குழு தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இலங்கை மின்சார சபையின் திட்ட திணைக்களத்தை கலைத்து விட வேண்டும் எனவும் அமைச்சரவை உப குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பாக தேசிய திட்ட பிரிவு ஒன்று புதிதாக ஏற்படுத்தப்படவுள்ளது.

குறுகிய காலத்திற்குள் மூன்று முறை நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை மற்றும் மின்மாற்றிகள் வெடித்தமை சம்பந்தமாக விசாரணை நடத்தி, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில், அமைச்சரவை உப குழுவை நியமித்தார்.

இந்த குழுவின் அறிக்கை கடந்த வாரம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

39531

 

SHARE